ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தோட்ட பாடி, கனியாமூர் மற்றும் பூண்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழாக 2028 21-இல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளனர்.இதனையடுத்து இத்திட்டத்தின் மூலமாக பயன் அடைந்த விவசாயிகளிடம் ஒவ்வொரு இனத்திலும் எவ்வாறு வருமானம் அதிகரிக்கிறது என்பதையும் கேட்டு அறிந்து கொண்டார்.
அதன் பின் மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி சாகுபடி, பராமரிப்பு செய்யும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தோட்டக்கலைத் துறை வழங்கப்பட்ட சொட்டுநீர் மூலமாக பயிரிடப்பட்டுள்ள முலாம்பழ வயல்களை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரீதர் பழங்களை சந்தைப்படுத்துதல் மற்றும் ஆண்டு உற்பத்தி பின் பராமரிப்பு பற்றியும் கேட்டறிந்துள்ளார்.