விருச்சிகம் ராசி அன்பர்களே.! உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
இன்று உங்களுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மகிழ்வான அமைப்பு இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்குவதில் அல்லது புதுப்பிப்பது போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும். மனதிற்குள் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். அதற்கான வாய்ப்புகளும் கண்டிப்பாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கான சூழல் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். கனவை பெருக்கிக்கொள்ள முடியும்.
காதல் அச்சத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் மகிழ்ச்சியை கொடுக்கும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு நினைத்தது கைகூடும் நாள். கல்வி மீது அக்கறை ஏற்படும் நாள். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் மென்மேலும் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்