மீனம் ராசி அன்பர்களே.! சுயமான சிந்தனை இருக்கும்.
இன்று உங்கள் வாழ்க்கையை பொது பணிக்காக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். பொது நலனுக்காக உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் இருக்கும். விரும்பும் வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். வளர்ச்சி ஏற்பட்டாலும் கண்டிப்பாக விலகி செல்லும். வரவும் செலவும் சமமாக இருக்கும். சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுயமான சிந்தனை இருக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். புத்திகூர்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களின்போது வீண் அலைச்சல் ஏற்படும். தொழில் போட்டிகள் குறைந்துவிடும். தொழிலில் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். அதிகப்படியான வேகம் வேண்டாம். விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
உங்களுடைய திட்டங்கள் எல்லாமே பலிக்கும். நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். எதிர்காலத்திற்காக சில திட்டங்களை தீட்ட முடியும். கல்வியில் மென்மேலும் வளர முடியும். கல்வி பற்றிய கவலை தீர்ந்து விடும். காதலின் நிலைபாடுகள் கஷ்டத்தை கொடுத்தாலும் கண்டிப்பாக இனிமையைக் கொடுக்கும். பொறுமை அவசியம். சில விஷயங்களில் காலதாமதம் ஏற்படும். அதனால் மன வருத்தம் கொள்ள வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு