Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்…. முழு விபரம் இதோ….!!!!

தமிழகத்தின் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக  இன்று  மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாமரை நகர், செங்கம் ரோடு, ரமணாஸ்ரமம், வேங்கிக்கால், கீழ்நாச்சிபட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாட்டி, வட ஆண்டபட்டு, சேரியந்தல் வள்ளிவாகை, களஸ்தம்பாடி, சடையோனடை, சனாந்தல், கிளியாப்பட்டு, குண்ணமுறிஞ்சு குன்னியந்தல், மல்லவாடி, துரிஞ்சாபுரம், கருத்துவம்பாடி மற்றும் நாயுடு மங்கலம் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்சாரம் மின் வினியோகம் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 3மணி வரை வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம்,   கே. பி. தளவாய்புரம், ராமசாமி புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கல்லன் பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டபாறை, கேம்ப் தட்டபாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கடையம் மற்றும் துலுக்கப்பட்டி வீரவநல்லூர் பகுதியில் அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் கடையம் ஆகிய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இம்மையங்களில் இருந்து மின்சார வசதி தரும் கல்லிடை அம்பை வீரவநல்லூர் மணிமுத்தாறு விகே புரம் ஆகிய பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மருங்குளம் மின் பாதையில் வல்லம், ஒரத்தநாடு சாலையில் நெடுஞ்சாலைத்துறையில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. இதனால் மருங்குளம் என் பாதையில் இருந்து மின் வினியோகம் பெரும் நடுவூர் மருங்குளம், வடக்குப்பட்டு, வல்லுண்டன்பட்டு வேங்குராயன்குடிக்காடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |