சீனாவில் ‘U-be’ என்ற மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.35,000மதிப்பிலான இந்த ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். சிறுவர்களையும் முதியோர்களையும் மனதில் வைத்து உருவாகியுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே செல்லக்கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த வாகனம் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
Categories