கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவலகத்திற்கு வர தேவை இல்லை என்று கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் அலுவலகங்களை திறப்பதற்கு அமேசான் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவல கங்களை மூடி வைக்கும் அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் வரத் தேவையில்லை என்று கூறியுள்ளது. இதனைப் போலவே மற்ற நாடுகளில் இருக்கும் அலுவலகங்களை திறப்பது அல்லது மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் அலுவலகம் திறப்பதை அக்டோபர் மாதம் வரை தள்ளி வைத்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது அலுவலகங்களை மூடியுள்ளது. கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்கள் அலுவலகம் வரும் முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.