ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் பேச்சும் செயலும் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை தருவீர்கள். உணவு பொருட்களை மட்டும் தரம் அறிந்து உண்ணுங்கள். செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும் , பார்த்துக்கொள்ளுங்கள். பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்ற கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு கடன் பெற நேரிடும். மனைவி உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். இன்னைக்கு கோபம், படபடப்பு குறையும் . மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தீடிர் செலவுகள் மட்டும் இருக்கும் . மாணவர்களுக்கு , உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடி வரும். வேலை இல்லாத நண்பர்களுக்கும் வேலை வாய்ப்புகள் தேடி வரும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீலம்
இந்த நிறங்களில் நீங்கள் ஆடை அணிந்து சென்றால் காரியம் வெற்றி தரும்.