Categories
மாநில செய்திகள்

கடன் வரம்பு 12 லட்சமாக உயர்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு பணியாளர்கள் கடன் வரம்பை 6 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நகர கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்காத நகர கூட்டுறவு வங்கிகள் கடன் பெற கூட்டுறவு துறை அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |