Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசியா ? பெற்றோரின் தேவையை நிறைவேத்துவிங்க ….!!

மிதுன ராசி அன்பர்களே…!! உங்களின் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். அது நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். அக்கம்பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். நண்பரிடம் சில விஷயம் பேசுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவுகின்ற அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. பணப்பரிவர்த்தனை சுமாராகவே இருக்கும்.அதிகம் பயன்தராத பொருட்களை நீங்கள் வாங்க வேண்டாம்.இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் , ஆயுதங்களை கையாள்பவர்கள் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். கொடுக்கல் , வாங்கல் விஷயங்கள் ஓரளவு நன்மை கொடுக்கும். கடன்கள் மட்டும் இன்று நீங்கள் யாரிடம் வாங்காதீர்கள். இன்று இருப்பதை வைத்துக்கொண்டு செலவு செய்வது மிகவும் சிறப்பு. இன்று மாணவர்களுக்கு கல்வியில் முயற்சியின் பேரில் வெற்றி இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் மிகவும் நல்லது .

அதிஷ்டமான திசை : தெற்கு

இன்று அதிஷ்டமான எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |