Categories
தேசிய செய்திகள்

முதுநிலை நீட் தேர்வுக்கு…. விண்ணப்பித்த மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. அவ்வாறு இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய விரும்பும் மாணவர்கள் https://nbe.edu.in/ என்ற இணையதளம் மூலம் தங்களுடைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |