முதலாம், 2 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 50 ரூபாய். மதிப்பெண் சான்று 100 ரூபாய் செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவை கட்டணம் 15 ரூபாய், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் 50 ரூபாய் மாணவர்கள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரையும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு நடைபெறுகிறது.
Categories