12-ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் 17-வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டு பாலியல் பாலத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு உதவி செய்த விவேக், ரஞ்சித்குமார் ஆகிய 2 இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.