பிரித்தானியாவில் சிகரெட் வாங்குவதற்கான வயது தடை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பிரித்தானியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளைஞர்களே புகைபிடிப்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிகரெட்டையடுத்து இ சிகரெட்டுகளும் தடை செய்யப்படலாம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 6 மில்லியன் மக்கள் தற்போது பிரித்தானியாவில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக புகை பிடிப்பதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வருகின்ற 2030-ம் ஆண்டுக்குள் பிரித்தானியாவை புகை இல்லாத நாடாக உருவாக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியில் உள்ளனர். அந்த வகையில் சிகரெட்டுகளை தடை செய்வதன் மூலமும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கையை சுமார் 5% குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் 2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வை விட தற்போது 20 சதவீதம் பேர் அதிகமாக புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பரவுவதற்கு முன்பு புகை பிடிப்பவர்கள் 17.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே சிகரெட் வாங்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சிகரெட் வாங்குவதற்கான வயது தடையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கிடையே “2030-ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவை புகை இல்லாத நாடாக உருவாக்க வேண்டும். அதற்கான திட்டம் விரைவில் வெளியிடப்படும்” என்று சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.