உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் முதல் முறையாக தான் செய்த தவறுக்காக வருந்துவதாக கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவியுடனான திருமண உறவை முடித்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் சேர்ந்து தொண்டு அறக்கட்டளையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் நேற்று முன்தினம் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதியினருக்கு சட்டப்படி விவாகரத்து வழங்கியுள்ளது.
மேலும் இவர்களது விவாகரத்து தொடர்பாக கூறப்பட்ட காரணங்களில் பில்கேட்ஸ் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நட்பு வைத்திருந்தது முக்கிய காரணமாக கருதப்பட்டது. ஆனால் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவார் என்ற நோக்கத்திலேயே ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நட்பு வைத்திருந்ததாக கூறியுள்ளார். மேலும் தான் செய்தது தவறு தான் என்றும் வருந்தியுள்ளார். இருப்பினும் இந்த விவாகரத்து தனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இருவரும் சேர்ந்து அறக்கட்டளையில் ஒன்றாக பணி புரிவோம் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.