உடல்நலக்குறைவால் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிபாறை பகுதியில் வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த மாடசாமி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்சாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ படையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு மாரிச்சாமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து மாரிச்சாமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை கேட்ட மாரிச்சாமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து முன்னாள் ராணுவ வீரர்களின் நலச்சங்க தலைவர் கேசவராஜ் என்பவர் இறந்த மாரிச்சாமியின் உடலை அவரின் சொந்த ஊரான சிப்பிபாறைக்கு நாளைக்கு கொண்டு சென்று உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.