Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… காட்டில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேம்பார் கிராமத்தில் காட்டுப் பகுதி அமைந்துள்ளது. அந்தக் காட்டுப் பகுதிக்கு அங்கு வசிக்கும் மக்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அவரின் அருகில் விஷ பாட்டில் இருப்பதாகவும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இறந்த முதியவர் யார் என்பது பற்றி அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அவர்கள் யாருக்கும் எந்த விதமான விபரமும் தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |