தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளையும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் நாளையும், ஆகஸ்ட் 11 ஆகிய இரு நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.