அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கு வழங்கப்பட்ட பரிசு ஒன்றை வலைவீசி தேடி வருகிறது.
அமெரிக்க அரசு கோப்புகள் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றிருந்ததாகவும், அங்கு அவருக்கு 7,800 டாலர் மதிப்பிலான விஸ்கி போத்தலை ஜப்பானிய அதிகாரிகள் பரிசாக வழங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்த விஸ்கி போத்தல் மாயமானதாகவும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து அமெரிக்க அதிகாரிகள் பரிசு பெறுவது அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி சட்டவிரோதமான செயலாக கருதப்படும்.
அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்க அரசாங்கத்தின் சொத்தாகவே அந்த பரிசுகள் கருதப்படும். இந்த சட்டங்களை மீறி செயல்பட்டால் பதவியில் இருந்து அதிகாரிகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பொம்பேயோ தனக்கு விஸ்கி போத்தலை பெற்றதற்கான நினைவு எதுவுமில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.