போர்ச்சுக்கல் நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு வலது கை அக்குளில் மூன்றாவது மார்பகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண்ணின் வலது அக்குளில் குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலேயே வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. மேலும் அவரது வலது அக்குளில் இருந்து வெள்ளை நிற திரவம் ஒன்றும் சுரந்ததால் பயந்துபோன அந்த பெண் லிஸ்பனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு வலது கை அக்குளில் மூன்றாவது மார்பகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அந்த வெள்ளை நிற திரவமானது தாய்ப்பால் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற அதிசயம் உலகில் 6 சதவீத பெண்களுக்கு ஏற்படுமாம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அக்குளில் மார்பகத்துக்குரிய செல்கள் வளரும் போது எந்தவிதமான அறிகுறியும் தென்படாது.
மேலும் இந்த மூன்றாவது மார்பகமானது கர்ப்பிணியாக இருக்கும்போது பால் சுரப்பியும், அக்குளில் இருக்கும் மார்பகங்களும் செயல்பட தொடங்கி அதன் பிறகு குழந்தை பிறந்ததும் பால் சுரக்க ஆரம்பிக்கும். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறை குறித்து தெரிய வரும். அதேசமயம் குழந்தைகள் வளர தொடங்கியவுடன் அக்குளிலும் பால் சுரப்பது தானாகவே நின்று விடும். இந்த வகையான உடல் மாற்றத்திற்கு “பாலிமஸ்ஷியா” என்ற பெயரும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.