கொரோன காலகட்டத்தில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி அமேசான் கிரேட் பிரீடம் சேல் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 49,999 மதிப்புள்ள ரெட்மி mix11Pro போனுக்கு ரூ.8000 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.41,999 க்கு விற்கப்படுகிறது.
ரெட்மி mix 11x 5G போனுக்கு 6000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.27,999 க்கு விற்கப்படுகின்றது. இதர பட்ஜெட் ரெட்மி போன்களுக்கும் ரூ.2000 முதல் 3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவோடு இந்த ஆஃபர் முடிவடைகிறது.