Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 36 ரன்கள் வித்தியாசத்தில் …. சேப்பாக் அணி அபார வெற்றி ….!!!

கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ராஜகோபால் சதீஷ் 4 பவுண்டரி, 4 சிக்சர்களை அடித்து விளாசி 64 ரன்கள் குவித்தார். அதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

கோவை அணி சார்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன் மற்றும் வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய கோவை  அணி 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால்  சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கோவை அணி 123 ரன்களில் சுருண்டது. இதனால் சேப்பாக் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Categories

Tech |