பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் அந்த நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம், எனவே உரிய ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற தயார் நிலையில் இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதமும் அதிகரித்து வருவதால் பிரித்தானிய குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.