Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : கெத்து காட்டும் சேப்பாக் அணி …. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளை பெற்று  புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இன்று மாலை 3.30  மணிக்கு  நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 புள்ளிகளுடனும் , திருப்பூர் அணி 5 புள்ளிகளுடனும் உள்ளது. இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில்  சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் மோதுகின்றன. இதில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 புள்ளிகளுடனும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி  3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது . இதனால் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் சேலம் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |