ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்படி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்குப் பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர்.
மேலும் திருகோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், மனோன்மணி அம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், அரியநாச்சி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு கேப்பை கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.