Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால்  மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவசர காலத் தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே ஒரு டோஸ் செலுத்திக் கொள்ளும் வகையிலான தடுப்பூசியை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |