Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : ஈட்டி எறிதல், மல்யுத்ததில் …. இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்களா ….?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஈட்டி எறிதல், மல்யுத்தம் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் ,குத்துச்சண்டை ,துப்பாக்கி சுடுதல் ,வில்வித்தை போன்ற பல்வேறு போட்டிகளில்  இந்திய அணி வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதுவரை  இந்திய அணி 2 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது. இப்போட்டியில் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மல்யுத்த வீரர் ரவிக்குமார்      தாகியா ஆகியோர்  வெள்ளிப்பதக்கமும், பேட்மிட்டண் வீராங்கனை பி.வி .சிந்து மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை  லவ்லினா ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். அத்துடன் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்று  வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனால் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணிக்கு 2 பதக்கங்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்க உள்ள ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் முதல்  போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டதால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வார்  என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதையடுத்து அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரைஇறுதியில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்துக்கான  போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்க உள்ளதால் ,இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வெல்வாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Categories

Tech |