பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நிர்வாணமாக யோகா செய்யவிருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் முதலாக ஹிந்திய தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பானது. ஹிந்தியில் இதுவரை 15 சீசன்களை கடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு சர்ச்சையை சந்தித்துள்ளது.
இந்நிலையில் யோகா பயிற்சியாளரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான விவேக் மிஸ்ரா, தன்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாணமாக யோகா செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அதாவது புதிதாக உருவாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விவேக் மிஸ்ராவிடம் நிர்வாணமாக யோகா செய்ய கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக அவர் ஒரு நாளைக்கு 50 லட்சம் தருவதாக இருந்தால் தான் நிர்வாணமாக யோகா செய்ய ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.