Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்ய வந்த பூசாரிக்கு…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அம்மன் கோவிலில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நல்லமாள்புரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி முப்பிடாதி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 4 – ம் தேதி இரவு நேரத்தில் பூசாரி முப்பிடாதி பூஜைகளை முடித்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் கோவிலை திறப்பதற்காக பூசாரி முப்பிடாதி சென்றுள்ளார்.

இதனையடுத்து கோவில் திறக்கப்பட்டிருந்ததை கண்டு பூசாரி முப்பிடாதி அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பூசாரி முப்பிடாதி கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பூசாரி முப்பிடாதி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |