ஐ. நா.பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமில்லாத உறுப்பினர்களை இணைக்க ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான முயற்சிகளை முன்வைக்கும் சமயத்தில் வீட்டோ அதிகாரம் இல்லாத நிரந்தர உறுப்பினர்களை இணைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதில் ” ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை பிராந்திய நாடுகளின் சுழற்சி முறையில் இந்த மாதத்திற்கு இந்தியா ஏற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடன் இணைந்து செயல்புரிவது மிக அவசியமானதாகும். இதனை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபையை குறைந்த அளவு விரிவுபடுத்துவதற்கு எங்களின் ஆதரவை அளிக்கிறோம்.
இந்த அமைப்பிற்கு குறைந்த அளவில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போதுமானதாகும். மேலும் இந்த விரிவாக்கமானது ஐ.நா.பாதுகாப்பு சபையின் செயல்திறனை பாதிக்கும் விதத்திலோ அல்லது வீட்டோ அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ, வேறு நாட்டவருக்கு அதிகாரத்தை அளிக்கும் முறையிலோ அமைதல் கூடாது. அதிலும் ஐ.நா.பாதுகாப்பு சபையில் அதிக பிரதிநித்துவம் கொண்டு சிறப்பாக செயல்படும் விதத்திலும் இருக்க வேண்டும்.குறிப்பாக அமெரிக்கா மற்றும் உறுப்பு நாடுகளின் நலனைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.