Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெற்குகள்ளிகுளம் பகுதியில் ஜேக்கப் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வினோலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜேக்கப் சுமன் ஆனைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஜேக்கப் சுமன் மோட்டார் சைக்கிளில் உறவினரின் மகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில் ஆனைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஜேக்கப் சுமனின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்தார்.

இதில் ஜேக்கப் சுமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஜேக்கப் சுமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ஜேக்கப் சுமனுடன் வந்த உறவினரின் மகள் எந்த வித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜேக்கப் சுமனின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |