இமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து பாய்ந்து பாதியிலேயே செங்குத்தாக நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வகையில் அதன் ஓட்டுனர் சாமார்த்தியமாக கட்டுப் படுத்தி உள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறுதியாக அந்த பேருந்தின் ஓட்டுநரும் பாதுகாப்பாக நீக்கப்பட்டார். பேருந்தின் டயரில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைப்போலவே மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் அங்கு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்ட பேருந்து ஓட்டுநருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.