Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா …. தங்கம் வென்று சாதனை ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் மல்யுத்தம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா , நீரஜ் சோப்ரா பங்கேற்றனர். இதில் ஆடவர் வெண்கலப் பதக்கத்தை காண போட்டியில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதையடுத்து நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03  மீட்டர் தூரம் எறிந்தார் .இரண்டாவது சுற்றில் 87.58  மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார் . அடுத்து 3-வது சுற்றியில் 76.79 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் .இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று  நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனையை படைத்துள்ளார் .

Categories

Tech |