Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு, இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடாக கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை மற்றும் துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள 9 மதுக்கடைகள் இன்று செயல்படாது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |