Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது புதுசோ புதுசு …. இளநீர் ரசம்!!!

இளநீர் ரசம் 

தேவையான  பொருட்கள் :

இளநீர் – 1 கப்

தக்காளி சாறு –  1/4 கப்

துவரம்பருப்பு  –  1  டீஸ்பூன்

மிளகு-  1  டீஸ்பூன்

சீரகம் –  1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிது

இளநீர் வழுக்கை –  1/4 கப்

கடுகு – 1/4 ஸ்பூன்

எண்ணெய், உப்பு –  தேவையான அளவு

இளநீர்க்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின்  இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி  இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி  எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள்,  கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்தால்  சூப்பரான இளநீர் ரசம் தயார் !!!

Categories

Tech |