கடுமையான வறட்சியின் காரணமாக கஜகஸ்தான் நாட்டில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் பசியால் வாடி உயிரிழக்கின்றன.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள மாங்கிஸ்ட்டாவில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள குதிரைகள், ஒட்டகங்கள் நீர் மற்றும் உணவின்றி பசியால் வாடி உயிரிழக்கின்றன. இந்த வறட்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஅவர்கள் வளர்க்கும் குதிரை மற்றும் ஒட்டகங்களுக்கு உணவு அழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குதிரைகள், ஒட்டகங்களுக்கான தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று திணறி வருகின்றனர். குறிப்பாக கஜகஸ்தானில் சதைப்பற்று இன்றி காணப்படும் குதிரைகளும், ஒட்டகங்களும் மற்றும் இறந்தவைகளின் எலும்புக்கூடுகளும் அங்குள்ள கடுமையான வறட்சியை நம்மிடையே உணர்த்துகிறது.