சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே நள்ளிரவில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். பையில் இரண்டு INSAS வகை துப்பாக்கிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பிறகு விசாரணையில், பிரபல திரைப்பட இயக்குனரான பாண்டிராஜ், என்பவரின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தை இயக்கிவருவதாகவும், அந்த படப்பிடிப்புக்காக இரண்டு டம்மி துப்பாக்கிகள் தேவைப்பட்டதால் விக்டர் துப்பாக்கியை வாங்கி கொண்டு கோயம்பேடு நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக டம்மி துப்பாக்கியை காரைக்குடிக்கு அனுப்பி வைக்க சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் டம்மி துப்பாக்கிக்கு உண்டான ஆவணங்கள் விக்டரிடம் இல்லாததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.