Categories
மாநில செய்திகள்

குண்டாசை ரத்து செய்யக்கோரி… பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…!!!

டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து  மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைத்த பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் வந்த காரணத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அறிவுரை கழகத்தில் ஆஜராகி வாதாடிய நிலையில், பப்ஜி மதனின் மனு நாளை விசாரணைக்கு வருகின்றது. தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த தொழில் போட்டியாளர்கள் தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றி உள்ளனர் என மதன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |