பூ மார்க்கெட்டில் 5 டன் பூக்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கரட்டூர் மெயின் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பூ மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் விடப்படும். இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் 5 டன் பூக்களை ஏலம் விடுவதற்காக பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து மல்லிகைப்பூ கிலோ 450 ரூபாய்க்கும், முல்லைப் பூ கிலோ 172 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 93 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 400 ரூபாய்க்கும், கனகாம்பரம் 670 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும், செவ்வந்தி 160 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.