Categories
விளையாட்டு

ஒலிம்பிக் தடகள வரலாற்றில்… இந்தியாவிற்கு முதல் தங்கம்… பெருமிதம்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார் .120 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

23 வயதான இளம் வீரரான நீரஜ் சோப்ரா தனது 19 வயதில் ஆசிய போட்டியில் தங்கம்  வென்றார். இவர் இதுவரை 2 முறை ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2018 காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இவர் தற்போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டின் கனவை நனவாக்கி உள்ளார். ஒலிம்பிக் தடகள மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவின் தேசிய கீதம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |