Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வருமான வரி கட்டவில்லை” 6 லட்ச ரூபாய் மோசடி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வருமான வரித்துறையினர் என கூறி ரூ.6 லட்சத்தை எடுத்துச் சென்ற பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்காட்டில் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். மேலும் இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 30 – ஆம் தேதி செல்வகுமார் வீட்டிற்கு சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் 5 ஆண்கள் 1 பெண் உள்பட  6 நபர்கள் வந்து தங்களை சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துள்ளனர்.

அதன்பின் அந்த நபர்கள் அவரது வீட்டில் உள்ள அனைவரின் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வாங்கி கொண்டுள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டில் இருந்த அனைவரையும் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு செல்வகுமாரிடம் அவர் ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு செல்வகுமார் நான் ஆண்டிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வருமான வரி செலுத்தி வருகிறேன். அதற்கான ஆவணமும் என்னிடம் உள்ளது என செல்வகுமார் கூறியுள்ளார்.  அந்த ஆவணத்தை காட்டுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என செல்வகுமார் கூறியும் அந்த 6 நபர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

அதன்பின் அந்த 6 நபர்களும் வீட்டை நாங்கள் சோதனை செய்ய வேண்டும் எனவும், நீங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் உங்களை ஜெயிலில் போட்டு விடுவோம் என செல்வகுமாரை மிரட்டியுள்ளனர். அதன் பின் செல்வகுமாரின் அனுமதியுடன் வீட்டை அவர்கள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வருமான வரித்துறையினர் என கூறிய நபர்கள் ரூ.6 லட்சத்தை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் விசாரணை செய்ததில் சொகுசு காரில் வந்த 6 நபர்களும் அதிகாரிகள் இல்லை என்றும், அவர்கள் வருமான வரித்துறையினர் என கூறி பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து செல்வகுமார் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொகுசு காரின் பதிவு எண் போலியானது என்றும், அது ஒரு மோட்டார் சைக்கிளில் உள்ள எண் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி தனிப்படை காவல்துறையினர்  வருமான வரித்துறையினர் என கூறி மோசடி செய்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |