தேசிய அளவில், பெல்போரணி என்ற பிலிம் பெஸ்டிவல் விருதில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் நசீர் திரைப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில், அருண் கார்த்திக் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான நசீர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில், Koumarane Valavane என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இத்திரைப்படம், இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ரோட்டர்டம் என்ற விருது விழாவில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் இயக்குனர் அருண் கார்த்திக், பெல்போரணி என்ற பிலிம் பெஸ்டிவல் அவார்டில் சிறந்த இயக்குனருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று, சூரரைப்போற்று திரைப்படத்திற்காக, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா, இருவரும் இந்த விருது விழாவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.