டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இந்திய விளையாட்டு வரலாற்றில் முத்திரை பதிக்கும் ஒருநாள். 120 ஆண்டு காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த தீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கானோர் மனதில் நம்பிக்கை பதித்துள்ளீர்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.