துலாம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும்.
உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் பாராட்டுகளும் தேவையான பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தடைகளைத்தாண்டி சில முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள்.
அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இன்று உறவினர்களின் வருகை உண்டாகும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு முடிவையும் எடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.