Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் ரத்த காயத்துடன் சன்னி லியோன்… ‘ஷெரோ’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் இதோ…!!!

சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ஷெரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தமிழில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட ‘ஷெரோ’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இக்கிகை மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அன்சாரி நெக்ஸ்டல் மற்றும் ரவிக்கிரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் மனோஜ்குமார் கடோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷெரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முகத்தில் ரத்த காயங்களுடன் மிரட்டலான லுக்கில் சன்னி லியோன் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |