தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி வேலை தேடி வந்த இடத்தில் தற்போது தனது புகைப்படம் வரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் சேதுபதி ஆரம்ப காலங்களில் பல துன்பங்களையும் சந்தித்துள்ளார். ஆனால் விடா முயற்சியின் காரணமாக சிறு வேடங்களில் நடித்து பிறகு பல படங்களிலும் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
அதோடு மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி அனபெல் சுப்பிரமணியம், காத்துவாக்குல ரெண்டு காதல், விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட 46 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே “நவரசா” என்னும் அந்தாலஜி கதையில் சம்பளம் வாங்காமல் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவ்வாறு சம்பளம் வாங்காமல் நடிப்பதற்கு காரணம் இந்த படம் சினிமாவில் பணியாற்றும் சிறு கலைஞர்கள் கருணாநிதிக்காக உருவாக்கப்பட்டது என்பதால் ஆகும்.
மேலும் துபாயில் உள்ள மிக பெரிய கட்டிடத்தில் இந்த படத்திற்கான புரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி துபாயில் தான் ஆரம்ப காலத்தில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகே படிப்படியாக உயர்ந்து தற்போது தான் வேலை பார்த்த இடத்திலேயே புகைப்படம் வரும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.