சரவணப் பாயசம்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 250 கிராம்
வெல்லம் – 500 கிராம்
தேங்காய் – 1/4 மூடி
வாழைப்பழம் – 3
ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
இளநீர் – 1
பச்சைக் கற்பூரம் – 1
நெய் – 250 மில்லி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசியை வேக விட்டு , வெந்ததும் வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் இறக்கி இளநீர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கிளறினால் சுவையான சரவணப் பாயசம் தயார் !!!