Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிழலுக்காக அமர்ந்த தொழிலாளி… லாரியால் நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

நிழலுக்காக லாரியின் அடியில் அமர்ந்திருந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி வேலை செய்து விட்டு சோர்வில் நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்து இருந்துள்ளார். இதனை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கியுள்ளார்.

இதனால் பொன்னுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |