மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரான காளியப்பன் என்பவர் சிவகாசியில் அமைந்திருக்கும் எஸ்.எம்.புரம் ரோட்டில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அந்த டிராக்டரில் மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு டிராக்டரின் டிரைவர் அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆலாவூரணி பகுதியில் மச்சக்காளை என்பவரின் மீது வழக்கு பதிவு செய்ததோடு அவரிடமிருந்த டிராக்டர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.