இருசக்கர வாகனம் மோதி 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழராஜகுலராமன் பகுதிக்கு செல்லும் வழியில் கோபாலபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, சுப்புரத்தினம், சுப்புலட்சுமி மற்றும் பரமசிவன் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் 4 பேரின் மீதும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.