பிரபல முன்னணி மருத்துவர் ஒருவர் ஜெர்மனிக்கு திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் Frank Ulrich Montgomery ஜெர்மனிக்கு திரும்புபவர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களா, முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களா என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்று கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று தான் என்று கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் ஜெர்மனிக்கு திரும்புபவர்களில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுபவர்களாகவோ, தடுப்பூசி பெறாதவர்களாகவோ இருக்கும் பட்சத்தில் ஜெர்மனிக்குள் நுழையும்போது தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பரிசோதனை செய்த பிறகு ஆவணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் விமானம், கார், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து ஆனாலும் பரிசோதனை கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.